ADDED : நவ 08, 2025 10:31 PM

விசாகப்பட்டனம்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழக அணி 182 ரன்னுக்கு சுருண்டது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரஞ்சி கோப்பை 91வது சீசன் நடக்கிறது. விசாகப்பட்டனத்தில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஆந்திரா அணிகள் விளையாடுகின்றன.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தமிழக அணிக்கு விமல் குமார் (10), நாராயணன் ஜெகதீசன் (19) சோபிக்கவில்லை. பாலசுப்ரமணியம் சச்சின் (4), பிரதோஷ் ரஞ்சன் பால் (8), ஆன்ட்ரி சித்தார்த் (0) ஏமாற்றினர். பாபா இந்திரஜித் (19) நிலைக்கவில்லை. கேப்டன் சாய் கிஷோர் (8) சொற்ப ரன்னில் வெளியேறினார். பின் இணைந்த சோனு யாதவ் (26), வித்யுத் (40) ஜோடி ஆறுதல் தந்தது.
தமிழக அணி முதல் இன்னிங்சில் 182 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆந்திரா சார்பில் பிரித்வி ராஜ் 4 விக்கெட் கைப்பற்றினார்.
பின் களமிறங்கிய ஆந்திர அணிக்கு ஸ்ரீகர் பரத் (12) ஏமாற்றினார். ஆட்டநேர முடிவில் ஆந்திரா அணி முதல் இன்னிங்சில் 20/1 ரன் எடுத்திருந்தது. அபிஷேக் ரெட்டி (3), திரிபுரணா விஜய் (1) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் திரிலோக் நாக் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

