/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி கோப்பை: இந்திரஜித் சதம்
/
ரஞ்சி கோப்பை: இந்திரஜித் சதம்
ADDED : பிப் 16, 2024 10:05 PM

சேலம்: பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழகத்தின் பாபா இந்திரஜித் சதம் விளாசினார்.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் முதல் தர ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. சேலத்தில் துவங்கிய 'சி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தமிழக அணிக்கு சுரேஷ் லோகேஷ்வர் (10), பிரதோஷ் ரஞ்சன் பால் (20), நாராயண் ஜெகதீசன் (22), முகமது அலி (27) சோபிக்கவில்லை. பின் இணைந்த பாபா இந்திரஜித், விஜய் சங்கர் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. அபாரமாக ஆடிய இந்திரஜித் சதம் விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த விஜய் சங்கர் அரைசதம் கடந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 291 ரன் எடுத்திருந்தது. இந்திரஜித் (122), விஜய் சங்கர் (85) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் சார்பில் சுக்விந்தர் சிங் 2 விக்கெட் சாய்த்தார்.