/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி கோப்பை: தமிழகம் அபாரம் * சாய் கிஷோர் 5 விக்.,
/
ரஞ்சி கோப்பை: தமிழகம் அபாரம் * சாய் கிஷோர் 5 விக்.,
ரஞ்சி கோப்பை: தமிழகம் அபாரம் * சாய் கிஷோர் 5 விக்.,
ரஞ்சி கோப்பை: தமிழகம் அபாரம் * சாய் கிஷோர் 5 விக்.,
ADDED : பிப் 23, 2024 10:45 PM

கோவை: ரஞ்சி கோப்பை காலிறுதியில் தமிழகத்தின் சாய் கிஷோர், 5 விக்கெட் சாய்க்க, முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 183 ரன்னுக்கு சுருண்டது.
இந்தியாவில் நடக்கும் முதல் தர ரஞ்சி கோப்பை தொடரில், நேற்று காலிறுதி போட்டிகள் துவங்கின. கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் போட்டியில் தமிழக அணி, நடப்பு சாம்பியன் சவுராஷ்டிராவை சந்திக்கிறது. 'டாஸ்' வென்ற சவுராஷ்டிரா, பேட்டிங் தேர்வு செய்தது.
சாய் அபாரம்
சவுராஷ்டிரா அணிக்கு ஹர்விக், கெவின் (0) ஜோடி துவக்கம் தந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 2 ரன்னில் அஜித் ராம் சுழலில் சிக்கினார். தர்மேந்திரசின் (0), சிராக் (0), கேப்டன் உனத்கட் (1), சாய் கிஷோர் சுழலில் வீழ்ந்தனர். ஹர்விக் மட்டும் 83 ரன் எடுத்தார். சவுராஷ்டிா அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னுக்கு சுருண்டது. சாய் கிஷோர் 5, அஜித் ராம் 3 விக்கெட் கைப்பற்றினர். பின் களமிறங்கிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 23/1 ரன் எடுத்து 160 ரன் பின்தங்கி இருந்தது. ஜெகதீசன் (12), சாய் கிஷோர் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
* நாக்பூரில் நடக்கும் கர்நாடக அணிக்கு எதிரான காலிறுதியில், முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் விதர்பா அணி 261/3 ரன் எடுத்திருந்தது.
* மும்பையில் நடக்கும் போட்டியில் மும்பை, பரோடா அணிகள் மோதுகின்றன. முதல் நாளில் மும்பை அணி, முதல் இன்னிங்சில் 248/5 ரன் எடுத்திருந்தது. மும்பை அணியின் முஷிர் கான் 128 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
* இந்துாரில் நடக்கும் ஆந்திராவுக்கு எதிரான போட்டியில், மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 234/9 ரன் எடுத்திருந்தது.