தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ரஞ்சி கோப்பை: தமிழகம் ‘டிரா’

ரஞ்சி கோப்பை: தமிழகம் ‘டிரா’

ரஞ்சி கோப்பை: தமிழகம் ‘டிரா’


UPDATED : அக் 15, 2026 12:00 AM

ADDED : அக் 14, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 12:00 AM ADDED : அக் 14, 2026 07:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெய்ப்பூர்: தமிழகம், ராஜஸ்தான் அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை லீக் போட்டி ‘டிரா’ ஆனது.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை முதல்தர கிரிக்கெட் தொடரின் 92வது சீசன் நடக்கிறது. நேற்று கடைசி, நான்காவது நாள் ஆட்டம் நடந்தன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ‘டி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ராஜஸ்தான் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ராஜஸ்தான் 363 ரன், தமிழகம் 274 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் ராஜஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்சில் 81/4 ரன் எடுத்து, 170 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

மஹிபால் (84), கார்த்திக் சர்மா (42) கைகொடுக்க, ராஜஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 192/6 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. அடுத்து சுமார் 51 ஓவரில் 282 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது தமிழக அணி. சாய் சுதர்சன் (26), ஜெகதீசன் (45) நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 23 ஓவரில் 73/0 ரன் எடுத்த போது, போட்டி ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ராஜஸ்தான் 3, தமிழகம் 1 புள்ளி பெற்றன.

புதுச்சேரி தோல்வி

நாக்பூரில் நடந்த ‘ஏ’ பிரிவு போட்டியில் முதல் இன்னிங்சில் விதர்பா 428, புதுச்சேரி 313 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் விதர்பா அணி 175/3 ரன் எடுத்து, ‘டிக்ளேர்’ செய்தது. பின் 291 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய புதுச்சேரி அணி 130 ரன்னில் சுருண்டது. விதர்பா 160 ரன்னில் வெற்றி பெற்றது.

தப்பியது காஷ்மீர்



ஸ்ரீநகரில் நடந்த போட்டியில் (‘ஏ’) மத்திய பிரதேசம் (196, 249/6), நடப்பு சாம்பியன் ஜம்மு அண்டு காஷ்மீர் (120, 88/7) அணிகள் மோதின. இப்போட்டி ‘டிரா’ ஆனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us