sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ரஞ்சி: காலிறுதியில் கலக்குமா தமிழகம்

/

ரஞ்சி: காலிறுதியில் கலக்குமா தமிழகம்

ரஞ்சி: காலிறுதியில் கலக்குமா தமிழகம்

ரஞ்சி: காலிறுதியில் கலக்குமா தமிழகம்


ADDED : பிப் 22, 2024 09:56 PM

Google News

ADDED : பிப் 22, 2024 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ரஞ்சி கோப்பை காலிறுதியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் முதல்தர ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. கோவையில் இன்று துவங்கும் காலிறுதியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் விளையாடுகின்றன.

லீக் சுற்றில் விளையாடிய 7 போட்டியில், 4 வெற்றி, 2 'டிரா', ஒரு தோல்வி என 28 புள்ளிகளுடன் 'சி' பிரிவில் முதலிடம் பிடித்த தமிழக அணி 7 ஆண்டுகளுக்கு பின் காலிறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங்கில் நாராயண் ஜெகதீசன் (775 ரன், 2 சதம்), பாபா இந்திரஜித் (606 ரன், 2 சதம்), பிரதோஷ் ரஞ்சன் பால் (436 ரன், ஒரு சதம்) நம்பிக்கை அளிக்கின்றனர். பவுலிங்கில் சாய் கிஷோர் (38 விக்கெட்), அஜித் ராம் (36), சந்தீப் வாரியர் (18) பலம் சேர்க்கின்றனர்.

சவுராஷ்டிரா அணி லீக் சுற்றில் பங்கேற்ற 7 போட்டியில், 4 வெற்றி, 2 'டிரா', ஒரு தோல்வி என 29 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. பேட்டிங்கில் 'டெஸ்ட் ஸ்பெஷலில்ஸ்ட்' புஜாரா (780 ரன், 3 சதம்), கேப்டன் அர்பித் வசவடா (440), பிரேர்க் மன்கட் (426) கைகொடுக்கின்றனர். பவுலிங்கில் தேர்மேந்திரசின் ஜடேஜா (39 விக்கெட்) நம்பிக்கை தருகிறார்.

சொந்த மண்ணில் தமிழக வீரர்கள் அசத்தும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறலாம்.






      Dinamalar
      Follow us