/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு: துலீப் டிராபியில் விளையாட
/
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு: துலீப் டிராபியில் விளையாட
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு: துலீப் டிராபியில் விளையாட
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு: துலீப் டிராபியில் விளையாட
ADDED : ஆக 12, 2024 11:05 PM

பெங்களூரு: துலீப் டிராபி தொடரில் இருந்து சீனியர் வீரர்களான ரோகித், கோலி, அஷ்வின், பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் முதல் தர போட்டி தொடரான துலீப் டிராபி (செப். 5-22) நடக்கவுள்ளது. மொத்தம் 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.
இந்நிலையில் இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சென்னை, சேப்பாக்கத்தில் செப். 19ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் (செப். 27-அக். 1) நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக சீனியர் வீரர்கள் துலீப் டிராபியில் பங்கேற்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வரும் ரோகித் சர்மா, விராத் கோலி, தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, காயத்தில் இருந்து மீண்டு வரும் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோருக்கு இத்தொடரில் பங்கேற்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ரோகித், கோலி விரும்பினால் இத்தொடரில் விளையாடலாம்.
மற்ற வீரர்களான ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், ரிஷாப் பன்ட் பங்கேற்க உள்ளனர். சாலை விபத்துக்கு பின் (2022) ரிஷாப் பன்ட் முதன்முறையாக முதல் தர போட்டியில் விளையாட உள்ளார்.
இதேபோல வரும் ஆக. 15ல் துவங்கவுள்ள புச்சி பாபு தொடரில் இந்திய 'டி-20' அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் (மும்பை), விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷான் (ஜார்க்கண்ட்) விளையாட உள்ளனர்.
பெங்களூருவுக்கு மாற்றம்
துலீப் டிராபி தொடர் ஆந்திராவின் அனந்தபூரில் நடக்கவுள்ளது. செப். 5-8ல் நடக்கும் 2 போட்டிகளில், 'ஏ'-'பி', 'சி'-'டி' அணிகள் மோதுகின்றன. அனந்தபூர் நகருக்கு விமான போக்குவரத்து வசதி இல்லாததால், சீனியர் வீரர்கள் பங்கேற்பதற்கு வசதியாக இதன் ஒரு போட்டி மட்டும் பெங்களூரு, சின்னசாமி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.