/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாராட்டு மழையில் ரிச்சா கோஷ்: பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில்
/
பாராட்டு மழையில் ரிச்சா கோஷ்: பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில்
பாராட்டு மழையில் ரிச்சா கோஷ்: பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில்
பாராட்டு மழையில் ரிச்சா கோஷ்: பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில்
ADDED : நவ 08, 2025 10:48 PM

கோல்கட்டா: இந்திய வீராங்கனை ரிச்சா கோஷுக்கு, பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணிக்கு கோப்பையுடன். ரூ. 40 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 51 கோடி அறிவிக்கப்பட்டது.
டில்லியில், பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்முவை சந்தித்த இந்திய வீராங்கனைகள் சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்களுக்கு, மாநில அரசு, உள்ளூர் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ், தனது சொந்த ஊரான சிலிகுரிக்கு சென்றார். அவருக்கு, பெங்கால் கிரிக்கெட் சங்கம், மேற்கு வங்க மாநில அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில், பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில் தங்க முலாம் பூசப்பட்ட 'பேட்', 'பால்' வழங்கப்பட்டது. தவிர இவர், பைனலில் எடுத்த ஒரு ரன்னுக்கு ஒரு லட்சம் வீதம், ரூ. 34 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. மேற்கு வங்க மாநில அரசு சார்பில் 'பங்கா பூஷண்' விருது, காவல் துறையில் டி.எஸ்.பி., பதவி, தங்க செயின் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, முன்னாள் இந்திய கேப்டன்களான சவுரவ் கங்குலி, ஜூலான் கோஸ்வாமி, பெங்கால் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

