ADDED : மார் 13, 2024 10:57 PM

மொஹாலி: ஐ.பி.எல்., தொடரில் சாதிக்க பயிற்சியை துவக்கினார் ரிஷாப் பன்ட்.
இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 26. கடந்த 2022, டிச. 30ல் டில்லியில் இவர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. வலது முழங்கால், கணுக்கால், மணிக்கட்டு என பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் இருந்து மீண்டு வந்த இவர், வரும் ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டராக விளையாட இந்திய கிரிக்கெட் போர்டு அனுமதி வழங்கியது.
வரும் தொடரில் டில்லி அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப்பை (மார்ச் 23) அதன் சொந்தமண்ணில் சந்திக்கவுள்ளது. இதையடுத்து நேற்று மொஹாலி சென்ற ரிஷாப் டில்லி அணியில் இணைந்தார். 662 நாளுக்குப் பின் மீண்டும் டில்லி அணி ஜெர்சியுடன் பயிற்சியை துவக்கினார்.
இதுகுறித்து டில்லி அணி வெளியிட்ட செய்தியில்,' 662 நாளுக்கு பிறகு... முதல் நாள், டில்லி அணி ஜெர்சியுடன்,' என தெரிவித்துள்ளது.

