/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரிஷாப் பன்ட் 'நம்பர்-6': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
/
ரிஷாப் பன்ட் 'நம்பர்-6': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ரிஷாப் பன்ட் 'நம்பர்-6': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ரிஷாப் பன்ட் 'நம்பர்-6': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : நவ 06, 2024 09:36 PM

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ரிஷாப் பன்ட் 6வது இடத்துக்கு முன்னேறினார்.
டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், 750 புள்ளி பெற்று, 11வது இடத்தில் இருந்து 'நம்பர்-6' இடத்துக்கு முன்னேறினார். மும்பை டெஸ்டின் இரு இன்னிங்சிலும் அரைசதம் கடந்த இவர், தரவரிசையில் தனது 2வது சிறந்த இடத்தை கைப்பற்றினார். ஏற்கனவே 2022, ஜூலையில் வெளியான தரவரிசையில் 5வது இடம் பிடித்திருந்தார்.
இந்திய துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (777 புள்ளி) 3வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 90 ரன் விளாசிய இந்தியாவின் சுப்மன் கில் (680) 16வது இடத்துக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான விராத் கோலி (655), கேப்டன் ரோகித் சர்மா (629) முறையே 22, 26வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.
இங்கிலாந்தின் ஜோ ரூட் (903) முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஜடேஜா 'நம்பர்-6': டெஸ்ட் பவுலர் தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, 802 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறினார். 'சுழலில்' அசத்திய இவர், மும்பை டெஸ்டின் இரு இன்னிங்சிலும் தலா 5 விக்கெட் சாய்த்திருந்தார். மற்ற இந்திய பவுலர்களான பும்ரா (838), அஷ்வின் (815) முறையே 3, 5வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் ரபாடா (872) தொடர்கிறார்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா (432), அஷ்வின் (296) முதலிரண்டு இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.