
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி, கிரிக்கெட் ஆஸ்திரேலிய (சி.ஏ.,) லெவன் அணியுடன் நான்கு நாள் ஆட்டத்தில் பங்கேற்றது. பிரிஸ்பேனில் நடந்த இப்போட்டியில் முதல் இன்னிங்சில் சி.ஏ., லெவன் அணி 214 ரன் எடுத்தது. இங்கிலாந்து லயன்ஸ் அணி 161/7 என திணறியது.
பின் வந்த இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ பிளின்டாப் மகன், ராக்கி பிளின்டாப், சதம் (108) விளாச, இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 316 ரன் எடுத்தது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக இளம் வயதில் (16 வயது, 291 நாள்) சதம் அடித்த வீரர் ஆனார் ராக்கி.
முன்னதாக இவரது தந்தை பிளின்டாப் (20 வயது, 28 நாள்) முதலிடத்தில் இருந்தார். இரண்டாவது இன்னிங்சில் சி.ஏ., லெவன் அணி 442/9 ('டிக்ளேர்'), இங்கிலாந்து லயன்ஸ் 276/9 ரன் எடுக்க போட்டி 'டிரா' ஆனது.

