/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஐ.சி.சி., கனவு அணியில் ரோகித்: கோலிக்கு இடமில்லை
/
ஐ.சி.சி., கனவு அணியில் ரோகித்: கோலிக்கு இடமில்லை
ADDED : ஜூலை 01, 2024 11:21 PM

துபாய்: 'டி-20' உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடிப்படையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.,) கனவு அணியை அறிவித்துள்ளது.
பைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற கோலிக்கு இடமில்லை. இவரை தவிர ரோகித் சர்மா (8 போட்டியில் 257 ரன், ஸ்டிரைக் ரேட் 156.7), பைனலில் 'கேட்ச்' நாயகன் சூர்யகுமார் (199 ரன்), ஹர்திக் பாண்ட்யா (144 ரன், 11 விக்.,), அக்சர் படேல் (92 ரன், 9 விக்.,), பும்ரா (15 விக்கெட்), அர்ஷ்தீப் சிங் (17 விக்., ) என 6 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் குர்பாஸ் (281) உட்பட 3 பேர் தேர்வாகினர்.
கனவு அணி: ரோகித் சர்மா, சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங் (அனைவரும் இந்திய வீரர்கள்), குர்பாஸ், ரஷித் கான், பரூக்கி (மூவரும் ஆப்கானிஸ்தான்), ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா), நிகோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்).
12வது வீரர்: நோர்க்யா (தென் ஆப்ரிக்கா)