/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரோகித் சர்மா 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
/
ரோகித் சர்மா 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ரோகித் சர்மா 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ரோகித் சர்மா 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : ஆக 13, 2025 09:29 PM

துபாய்: ஒருநாள் போட்டி பேட்டருக்கான ஐ.சி.சி., தரவரிசையில் இந்தியாவின் ரோகித் 2வது இடத்துக்கு முன்னேறினார்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் பட்டியலில் இந்தியாவின் ரோகித் சர்மா, 756 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின் சுப்மன் கில் (784 புள்ளி) 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார்.
மற்ற இந்திய வீரர்களான விராத் கோலி (736 புள்ளி, 4வது இடம்), ஷ்ரேயஸ் (704 புள்ளி, 8வது இடம்) 'டாப்-10' வரிசையில் தொடர்கின்றனர்.
பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் (650), ரவிந்திர ஜடேஜா (616) முறையே 2, 9வது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். இலங்கையின் மகேஷ் தீக் ஷனா (671) 'நம்பர்-1' இடத்தில் உள்ளார்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா (220) 10வது இடத்தில் நீடிக்கிறார். ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா உமர்சாய் (296) முதலிடத்தில் உள்ளார்.