/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரோகித் சர்மா 'நம்பர்-3': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
/
ரோகித் சர்மா 'நம்பர்-3': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ரோகித் சர்மா 'நம்பர்-3': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ரோகித் சர்மா 'நம்பர்-3': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : ஆக 08, 2024 11:18 PM

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா 3வது இடத்துக்கு முன்னேறினார்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, 763 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 'நம்பர்-3' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டியில், 2 அரைசதம் உட்பட 157 ரன் ('ஸ்டிரைக் ரேட்' 141.44) குவித்தார். இத்தொடரில் ஏமாற்றிய இந்தியாவின் விராத் கோலி (752) 3வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிரண்டு இடங்களை பாகிஸ்தானின் பாபர் ஆசம் (824 புள்ளி), இந்தியாவின் சுப்மன் கில் (782) தக்கவைத்துக் கொண்டனர்.
குல்தீப் 'நம்பர்-4': பவுலர்களுக்கான தரவரிசையில் 5 இடம் முன்னேறிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், 4வது இடத்தை (தலா 662 புள்ளி) மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜுடன் பகிர்ந்து கொண்டார். இலங்கை தொடரில் 'சுழலில்' அசத்திய இவர், 4 விக்கெட் சாய்த்தார். இத்தொடரில் 5 விக்கெட் கைப்பற்றிய தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், 45 இடங்கள் முன்னேறி 97வது இடத்தை பகிர்ந்து கொண்டார். மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (651), 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.