/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ருதுராஜ், இஷான் கிஷான் சதம்: விஜய் ஹசாரே டிராபியில் அசத்தல்
/
ருதுராஜ், இஷான் கிஷான் சதம்: விஜய் ஹசாரே டிராபியில் அசத்தல்
ருதுராஜ், இஷான் கிஷான் சதம்: விஜய் ஹசாரே டிராபியில் அசத்தல்
ருதுராஜ், இஷான் கிஷான் சதம்: விஜய் ஹசாரே டிராபியில் அசத்தல்
ADDED : டிச 23, 2024 10:16 PM

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே டிராபியில் இஷான் கிஷான் (ஜார்க்கண்ட்), ருதுராஜ் கெய்க்வாட் (மகாராஷ்டிரா) சதம் கடந்தனர்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விஜய் ஹசாரே டிராபி ('லிஸ்ட் ஏ') 31வது சீசன் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. ஜெய்ப்பூரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் மணிப்பூர், ஜார்க்கண்ட் அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த மணிப்பூர் அணிக்கு ஜான்சன் சிங் (69) கைகொடுக்க, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 253 ரன் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஜார்க்கண்ட் அணிக்கு கேப்டன் இஷான் கிஷான் 78 பந்தில், 134 ரன் (6 சிக்சர், 16 பவுண்டரி) எடுத்து கைகொடுத்தார். ஜார்க்கண்ட் அணி 28.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 255 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை இஷான் கிஷான் வென்றார்.
ருதுராஜ் அபாரம்: மும்பையில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் மகாராஷ்டிரா அணி (205/1, 20.2 ஓவர்) 9 விக்கெட் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணியை (204/10, 48 ஓவர்) வீழ்த்தியது. அபாரமாக ஆடிய மகாராஷ்டிரா அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 74 பந்தில் 148* ரன் (11 சிக்சர், 16 பவுண்டரி) எடுத்து கைகொடுத்தார். ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.அடுத்து நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி தேர்வு விரைவில் நடக்கவுள்ளது. விஜய் ஹசாரே டிராபியில் அசத்தி வரும் ருதுராஜ், இஷான் கிஷான் உள்ளிட்டோர் சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்யப்படலாம்.