/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'ரன் மெஷின்' விராத் கோலி: 14 ஆயிரம் ரன்னை கடந்தார்
/
'ரன் மெஷின்' விராத் கோலி: 14 ஆயிரம் ரன்னை கடந்தார்
'ரன் மெஷின்' விராத் கோலி: 14 ஆயிரம் ரன்னை கடந்தார்
'ரன் மெஷின்' விராத் கோலி: 14 ஆயிரம் ரன்னை கடந்தார்
UPDATED : பிப் 23, 2025 09:15 PM
ADDED : பிப் 22, 2025 11:11 PM

துபாய்: இந்தியாவின் விராத் கோலி, ஒருநாள் போட்டியில் 14 ஆயிரம் ரன்னை கடந்து சாதனை படைத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்தியாவின் கோலி அரைசதம் கடந்தார். பாகிஸ்தானின் ஹாரிஸ் ராப் பந்தை (12.2வது ஓவர்) பவுண்டரிக்கு விரட்டிய கோலி, ஒருநாள் போட்டி அரங்கில் 14,000 ரன்னை கடந்தார். இதுவரை 299 போட்டியில், 50 சதம் உட்பட 14,056* ரன் எடுத்துள்ளார். இந்த இலக்கை அடைந்த 3வது வீரரானார் கோலி. ஏற்கனவே இந்தியாவின் சச்சின் (18,426 ரன், 463 போட்டி), இலங்கையின் சங்ககரா (14,234 ரன், 404 போட்டி) இம்மைல்கல்லை எட்டினர்.
* அதிவேகமாக 14,000 ரன்னை எட்டிய வீரரானார் கோலி. இவர், 287 இன்னிங்சில் அடைந்தார். இதற்கு முன் சச்சின் 350, சங்ககரா 378 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினர்.
* கடந்த 2018ல் ஒருநாள் அரங்கில் 10,000 ரன்னை எட்டிய கோலி, அதிவேகமாக 11, 12, 13 ஆயிரம் ரன்னையும் கடந்தார்.
20 இன்னிங்ஸ்
இந்தியாவின் கோலி, கடந்த 2023, செப். 10ல் கொழும்புவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் 13,000 ரன்னை எட்டினார். அதன்பின் களமிறங்கிய 20வது இன்னிங்சில் (3, 56, 85, 55*, 16, 103*, 95, 0, 88, 101*, 51, 117, 54, 24, 14, 20, 5, 52, 22, 71*) தனது 14 ஆயிரம் ரன்னை கடந்தார்.
157 'கேட்ச்'
குல்தீப் ஓவரில் நசீம் ஷா அடித்த பந்தை கோலி பிடித்தார். இதன் மூலம் ஒருநாள் அரங்கில் அதிக 'கேட்ச்' செய்த இந்திய 'பீல்டர்' ஆனார். 299 போட்டியில் 157 கேட்ச் உடன் முதலிடத்திற்கு முன்னேறினார். அடுத்த இரு இடங்களில் அசார் (334 போட்டி, 156 கேட்ச்), சச்சின் (463 போட்டி, 140 கேட்ச்) உள்ளனர்.
* சர்வதேச அளவில் அதிக 'கேட்ச்' பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார் கோலி. முதலிரண்டு இடங்களில் ஜெயவர்தனா (448 போட்டி, 218 கேட்ச்), பாண்டிங் (ஆஸி., 375 போட்டி, 160 கேட்ச்) உள்ளனர்.