/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சிக்சரில் சாதிப்பாரா ஜெய்ஸ்வால்: வங்கதேச தொடரில் வாய்ப்பு
/
சிக்சரில் சாதிப்பாரா ஜெய்ஸ்வால்: வங்கதேச தொடரில் வாய்ப்பு
சிக்சரில் சாதிப்பாரா ஜெய்ஸ்வால்: வங்கதேச தொடரில் வாய்ப்பு
சிக்சரில் சாதிப்பாரா ஜெய்ஸ்வால்: வங்கதேச தொடரில் வாய்ப்பு
ADDED : செப் 11, 2024 11:07 PM

புதுடில்லி: இந்தியாவின் ஜெய்ஸ்வால், டெஸ்டில் ஒரு சீசனில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனை படைக்க காத்திருக்கிறார்.
டெஸ்ட் அரங்கில், ஒரு சீசனில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2014ல் 9 டெஸ்டில் விளையாடிய இவர், 33 சிக்சர் அடித்திருந்தார். இரண்டாவது இடத்தை தலா 26 சிக்சர் விளாசிய இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (15 டெஸ்ட், 2022), இந்தியாவின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (6 டெஸ்ட், 2024) பகிர்ந்து கொண்டுள்ளனர்.
வங்கதேச டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால், 8 சிக்சர் விளாசும் பட்சத்தில், இப்பட்டியலில் முதலிடம் பிடித்து பிரண்டன் மெக்கலம் சாதனையை முறியடிக்கலாம்.
ரோகித் '1000'இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த 'டாப்-4' வீரர்கள் வரிசையில் இலங்கையின் பதும் நிசங்கா (1135 ரன், 23 போட்டி), குசால் மெண்டிஸ் (1111 ரன், 32 போட்டி), இந்தியாவின் ஜெய்ஸ்வால் (1033 ரன், 14 போட்டி), கேப்டன் ரோகித் சர்மா (990 ரன், 20 போட்டி) உள்ளனர். இதில் ரோகித், கூடுதலாக 10 ரன் எடுக்கும் பட்சத்தில் 1000 ரன் என்ற மைல்கல்லை எட்டலாம். நிசங்காவை விட 102 ரன் பின்தங்கி உள்ள ஜெய்ஸ்வால் ரன் மழை பொழிந்தால் இப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றலாம்.