/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சாய் கிஷோர் மீண்டும் கேப்டன்: ரஞ்சி கோப்பை தமிழக அணிக்கு
/
சாய் கிஷோர் மீண்டும் கேப்டன்: ரஞ்சி கோப்பை தமிழக அணிக்கு
சாய் கிஷோர் மீண்டும் கேப்டன்: ரஞ்சி கோப்பை தமிழக அணிக்கு
சாய் கிஷோர் மீண்டும் கேப்டன்: ரஞ்சி கோப்பை தமிழக அணிக்கு
ADDED : அக் 01, 2024 09:46 PM

சென்னை: ரஞ்சி கோப்பை தமிழக அணி கேப்டனாக சாய் கிஷோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 90வது சீசன் வரும் அக். 11ல் துவங்குகிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. கோவையில், அக். 11-14ல் நடக்கும் லீக் போட்டியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிக்கான 18 பேர் கொண்ட தமிழக அணி அறிவிக்கப்பட்டது. கடந்த சீசனில் தமிழக அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற சாய் கிஷோர், கேப்டனாக தொடர்கிறார். துணை கேப்டனாக, விக்கெட் கீப்பர் பேட்டர் ஜெகதீசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
துலீப் டிராபியின் போது காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் வாரியர், பாபா இந்திரஜித் இடம் பிடித்தனர். இவர்களது உடற்தகுதி அடிப்படையில் 'லெவன்' அணிக்கு தேர்வு செய்யப்படுவர். ஆன்ட்ரி சித்தார்த் முதன்முறையாக ரஞ்சி கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சித்தார்த், லக்சயா ஜெயின், குர்ஜப்னீத் சிங் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்கவில்லை.