/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சேலம், திருப்பூர் அணிகள் வெற்றி: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
/
சேலம், திருப்பூர் அணிகள் வெற்றி: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
சேலம், திருப்பூர் அணிகள் வெற்றி: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
சேலம், திருப்பூர் அணிகள் வெற்றி: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
ADDED : ஜூன் 08, 2025 11:34 PM

கோவை: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய சேலம், திருப்பூர் அணிகள் வெற்றி பெற்றன.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, சேலம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேலம் அணி கேப்டன் அபிஷேக், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
மதுரை அணிக்கு ராம் அரவிந்த் (37), பாலசந்தர் அனிருத் (23) நல்ல துவக்கம் தந்தனர். கேப்டன் சதுர்வேத் (32), அதீக் உர் ரஹ்மான் (38) கைகொடுத்தனர். மதுரை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சேலம் அணிக்கு நிதிஷ் ராஜகோபால் (60) நம்பிக்கை தந்தார். கவின் (48*) கைகொடுக்க, சேலம் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திருப்பூர் அபாரம்
மற்றொரு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' திண்டுக்கல், திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.
திண்டுக்கல் அணிக்கு கேப்டன் அஷ்வின் (18), ஷிவம் சிங் (30) சுமாரான துவக்கம் தந்தனர். இசக்கிமுத்து 'வேகத்தில்' சரிந்த திண்டுக்கல் அணி 16.2 ஓவரில் 93 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இசக்கிமுத்து 4 விக்கெட் சாய்த்தார்.
சுலப இலக்கை விரட்டிய திருப்பூர் அணிக்கு கேப்டன் துஷார் ரஹாஜே (65*) அரைசதம் கடந்து கைகொடுத்தார். திருப்பூர் அணி 11.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 94 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.