/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சஞ்சு சாம்சன், அபிமன்யு சதம்: துலீப் டிராபியில் அசத்தல்
/
சஞ்சு சாம்சன், அபிமன்யு சதம்: துலீப் டிராபியில் அசத்தல்
சஞ்சு சாம்சன், அபிமன்யு சதம்: துலீப் டிராபியில் அசத்தல்
சஞ்சு சாம்சன், அபிமன்யு சதம்: துலீப் டிராபியில் அசத்தல்
ADDED : செப் 20, 2024 10:33 PM

அனந்தபூர்: துலீப் டிராபி லீக் போட்டியில் சஞ்சு சாம்சன், அபிமன்யு ஈஸ்வரன் சதம் விளாசினர்.
ஆந்திராவின் அனந்தபூரில், துலீப் டிராபி கிரிக்கெட் 61வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இந்தியா 'பி', இந்தியா 'டி' அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் இந்தியா 'டி' அணி 306/5 ரன் எடுத்திருந்தது. சாம்சன் (89) அவுட்டாகாமல் இருந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் (106) சதம் கடந்து கைகொடுத்தார். இந்தியா 'டி' அணி முதல் இன்னிங்சில் 349 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா 'பி' சார்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட் சாய்த்தார்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்தியா 'பி' அணிக்கு நாராயண் ஜெகதீசன் (13), சூர்யகுமார் யாதவ் (5), நிதிஷ் குமார் ரெட்டி (0) உள்ளிட்டோர் ஏமாற்றினர். கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (116) நம்பிக்கை தந்தார். ஆட்டநேர முடிவில் இந்தியா 'பி' அணி முதல் இன்னிங்சில் 210/6 ரன் எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் (39) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா 'டி' சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
அபிஷேக் அரைசதம்
மற்றொரு லீக் போட்டியில் ஷஷ்வத் ரவாத் (124), அவேஷ் கான் (51*) கைகொடுக்க இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 297 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்தியா 'சி' அணிக்கு அபிஷேக் போரெல் (82) நம்பிக்கை தந்தார். ஆட்டநேர முடிவில் இந்தியா 'சி' அணி 216/7 ரன் எடுத்திருந்தது. இந்தியா 'ஏ' சார்பில் ஆகிப் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.