/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சான்ட்னர், ஜேமிசன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு
/
சான்ட்னர், ஜேமிசன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு
சான்ட்னர், ஜேமிசன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு
சான்ட்னர், ஜேமிசன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு
ADDED : டிச 24, 2025 09:24 PM

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு சான்ட்னர், ஜேமிசன் தேர்வாகினர்.
இந்தியா வரவுள்ள நியூசிலாந்து அணி, மூன்று ஒருநாள், ஐந்து 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி, ஜன. 11ல் வதோதராவில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் ராஜ்கோட் (ஜன. 14), இந்துாரில் (ஜன. 18) நடக்கவுள்ளன. நாக்பூர் (ஜன. 21), ராய்பூர் (ஜன. 23), கவுகாத்தி (ஜன. 26), விசாகப்பட்டினம் (ஜன. 28), திருவனந்தபுரத்தில் (ஜன. 31) 'டி-20' போட்டிகள் நடக்கவுள்ளன.
இத்தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இடுப்பு பகுதி காயத்தில் இருந்து மீண்ட மிட்செல் சான்ட்னர், 'டி-20' அணிக்கு கேப்டனாக திரும்பினார். வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன், ஒருநாள், 'டி-20' அணிகளில் இடம் பிடித்தார். ஒருநாள் போட்டி அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இளம் சுழற்பந்துவீச்சாளர் ஜேடன் லெனாக்ஸ், கிறிஸ்டியன் கிளார்க், ஆதி அசோக், ஜோஷ் கிளார்க்சன், நிக்கி கெல்லி, மைக்கேல் ரே ஆகியோரும் தேர்வாகினர்.
அணி விபரம்
ஒருநாள், 'டி-20' அணிகள்: மைக்கேல் பிரேஸ்வெல், கான்வே, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ஜாக் பால்க்ஸ்.
'டி-20' மட்டும்: சான்ட்னர், மார்க் சாப்மன், ஜேக்கப் டபி, மாட் ஹென்றி, பெவான் ஜேக்கப்ஸ், ஜேம்ஸ் நீஷம், ரச்சின் ரவிந்திரா, டிம் ராபின்சன், இஷ் சோதி.
ஒருநாள் போட்டி மட்டும்: ஜேடன் லெனாக்ஸ், கிறிஸ்டியன் கிளார்க், ஆதி அசோக், ஜோஷ் கிளார்க்சன், நிக்கி கெல்லி, மைக்கேல் ரே, மிட்ச் ஹே, வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ்.

