/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
உள்ளூர் போட்டியில் ஷமி: பெங்கால் உத்தேச அணியில் இடம்
/
உள்ளூர் போட்டியில் ஷமி: பெங்கால் உத்தேச அணியில் இடம்
உள்ளூர் போட்டியில் ஷமி: பெங்கால் உத்தேச அணியில் இடம்
உள்ளூர் போட்டியில் ஷமி: பெங்கால் உத்தேச அணியில் இடம்
ADDED : ஜூலை 19, 2025 09:43 PM

கோல்கட்டா: இந்தியாவின் ஷமி, பெங்கால் உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்திய சீனியர் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 33. இதுவரை 64 டெஸ்ட் (229 விக்கெட்), 108 ஒருநாள் (206), 25 சர்வதேச 'டி-20' (27) போட்டிகளில் விளையாடி உள்ளார். கணுக்கால் காயத்தில் இருந்து மீண்ட இவர், கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரில் விளையாடினார். அதன்பின் சாம்பியன்ஸ் டிராபியில் (9 விக்கெட், 5 போட்டி) பங்கேற்றார். பிரிமியர் லீக் 18வது சீசனில் ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய ஷமி (6 விக்கெட், 9 போட்டி), பெரிய அளவில் சோபிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.
மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்புவதற்காக ஷமி உள்ளூர் போட்டியில் விளையாட உள்ளார். இதற்காக பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில் 50 பேர் கொண்ட உத்தேச பட்டியல் வெளியானது. இதில் ஷமி இடம் பெற்றுள்ளார். தவிர இவர், வரும் ஆக. 28ல் துவங்கவுள்ள துலீப் டிராபியில் கிழக்கு மண்டல அணிக்காக களமிறங்க உள்ளார்.
உத்தேச அணியில், இங்கிலாந்து சென்றுள்ள 'டாப்-ஆர்டர் பேட்டர்' அபிமன்யு ஈஸ்வரன், வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் ஆகியோருடன் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார், சீனியர் பேட்டர் அனுஸ்துப் மஜும்தார், சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' ஷபாஸ் அகமது, விக்கெட் கீப்பர் பேட்டர் அபிஷேக் போரெல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.