sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ஷிகர் தவான் 'குட்-பை' * கிரிக்கெட்டில் இருந்து...

/

ஷிகர் தவான் 'குட்-பை' * கிரிக்கெட்டில் இருந்து...

ஷிகர் தவான் 'குட்-பை' * கிரிக்கெட்டில் இருந்து...

ஷிகர் தவான் 'குட்-பை' * கிரிக்கெட்டில் இருந்து...


ADDED : ஆக 24, 2024 11:04 PM

Google News

ADDED : ஆக 24, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் ஷிகர் தவான்.

இந்திய அணியின் துவக்க பேட்டர் ஷிகர் தவான் 38. டில்லியை சேர்ந்தவர். 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் (விசாகப்பட்டனம்) போட்டியில் அறிமுகம் ஆனார். ஒருநாள், டெஸ்ட், 'டி-20' என மூன்றுவித கிரிக்கெட்டிலும் ஜொலித்தார்.

கடைசியாக 2022ல் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இளம் வீரர் வருகையால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட 'வீடியோ' செய்தியில்,'எனது வாழ்க்கையில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. இது சிறப்பாக நடந்தது. இனிமேல் இந்தியாவுக்காக விளையாட முடியாது என்பது சோகம் தான் என்றாலும், தேசத்திற்காக விளையாடியது எப்போதும் மகிழ்ச்சி தரும்.

ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்க்கும் போது, நினைவுகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்வது முக்கியம். இதன் ஒரு பகுதியாக, சர்வதேச, உள்ளூர் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். நீண்ட காலமாக விளையாடிய நினைவுகள் எனது மனதில் உள்ளன. இந்த அமைதியான எண்ணங்களுடன், எனது கிரிக்கெட் பயணத்துக்கு 'குட்-பை' சொல்கிறேன்,' என தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி., தொடரில் அபாரம்

கடந்த 2004, 19 வயது உலக கோப்பையில் அதிக ரன் எடுத்தார் தவான் (7 போட்டி, 505 ரன்).

* 2017சாம்பியன்ஸ் டிராபியில் (5 போட்டி, 338 ரன்) தொடர் நாயகன் ஆனார்.

* 2015 உலக கோப்பையில் (8 ல் 412) அதிக ரன் எடுத்த இந்தியர் ஆனார்.

* 2019 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் விளாசினார்.

அதிவேக 'அறிமுக' சதம்

அறிமுக டெஸ்டில் (2013, மார்ச் 16, மொகாலி, ஆஸி.,) அதிவேக சதம் விளாசிய வீரர் என சாதனை படைத்தார். இவர், 85 பந்தில் 100 ரன் எடுத்தார்.

* மொத்தம் 187 ரன் குவித்த தவான், அறிமுக டெஸ்டில் அதிக ரன் எடுத்த இந்தியராக உள்ளார்.

65.15 ரன்

ஐ.சி.சி., தொடரில் அதிக ரன் சராசரி (65.15) வைத்துள்ள வீரர் தவான். இவர் 10 உலக கோப்பை (53.70), 10 சாம்பியன்ஸ் டிராபி (77.88) என, மொத்தம் 20 போட்டியில் 1238 ரன் (6 சதம்) எடுத்துள்ளார். கோலி (64.55) அடுத்து உள்ளார்.

கோலிக்கு அடுத்து...

ஐ.பி.எல்., அரங்கில் டெக்கான் சார்ஜர்ஸ், ஐதராபாத், டில்லி, மும்பை, பஞ்சாப் என ஐந்து அணிகளுக்காக விளையாடினார். 2016ல் கோப்பை வென்ற ஐதராபாத் அணியில் இடம் பெற்றார்.

* 222 போட்டியில், 6769 ரன் (2 சதம், 51 அரைசதம்) எடுத்தார். அதிக ரன் எடுத்த வீரர்களில் கோலிக்கு (252ல் 8004 ரன்) அடுத்து, இரண்டாவதாக உள்ளார்.

6000 எப்படி

ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 6000 ரன் (140 இன்னிங்ஸ்) எடுத்த இந்திய வீரர்களில், கோலிக்கு (136) அடுத்து உள்ளார். சர்வதேச அளவில் ஆம்லா (123), வில்லியம்சன் (139), வார்னருக்கு (139) அடுத்து, 5வது வீரர் ஆனார் தவான்.

10,867 ரன்

தவான், 34 டெஸ்டில் 2315 (7 சதம்), 167 ஒருநாள் போட்டியில் 6793 (17 சதம்), 68 'டி-20'ல் 1392 என மூன்று வித கிரிக்கெட்டில் மொத்தம் 269 சர்வதேச போட்டியில் 10,867 ரன் (24 சதம்) எடுத்துள்ளார்.

அன்னிய மண்ணில்...

தென் ஆப்ரிக்கா (1 சதம்), இங்கிலாந்து (4), நியூசிலாந்து (1), ஆஸ்திரேலியா (2) அணிகளுக்கு எதிராக, அவர்களது மண்ணில் சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் தவான்.

* ஒருநாள் அரங்கில் அடித்த 17 சதத்தில் 12ஐ அன்னிய மண்ணில் விளாசியுள்ளார்.

109

தனது நுாறாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என பெருமை பெற்றவர் தவான். 2018ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 109 ரன் (ஜோகனஸ்பர்க்) அடித்தார்.

363

ஐ.சி.சி., தொடரில் தவான் ரன் மழை பொழிந்தார் தவான். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் 5 போட்டியில் 363 ரன் விளாசினார். இவர், 'கோல்டன் பேட்' விருது வென்றார்.

768

ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக பவுண்டரி அடித்தவர் தவான். 222 போட்டியில் 768 பவுண்டரி விளாசினார். இரண்டாவது இடத்தில் விராத் கோலி (705) உள்ளார்.

5148

ஒருநாள் அரங்கில் அதிக ரன் எடுத்த இந்திய துவக்க ஜோடி வரிசையில் தவான்-ரோகித் (115 இன்னிங்ஸ், 5148 ரன்) 2வது இடம். சச்சின்-கங்குலிக்கு (136ல் 6609) முதலிடம்.






      Dinamalar
      Follow us