/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அரைசதம் விளாசினார் ஸ்ரேயாஸ்: துலீப் டிராபியில் எழுச்சி
/
அரைசதம் விளாசினார் ஸ்ரேயாஸ்: துலீப் டிராபியில் எழுச்சி
அரைசதம் விளாசினார் ஸ்ரேயாஸ்: துலீப் டிராபியில் எழுச்சி
அரைசதம் விளாசினார் ஸ்ரேயாஸ்: துலீப் டிராபியில் எழுச்சி
ADDED : செப் 21, 2024 11:07 PM

அனந்தபூர்: துலீப் டிராபி லீக் போட்டியில் ஸ்ரேயாஸ், ரிக்கி புய் அரைசதம் விளாச இந்தியா 'டி' அணி முன்னிலை பெற்றது.
ஆந்திராவின் அனந்தபூரில், துலீப் டிராபி கிரிக்கெட் 61வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இந்தியா 'பி', இந்தியா 'டி' அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் இந்தியா 'டி' 349, இந்தியா 'பி' 282 ரன் குவித்தது. பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா 'டி' அணிக்கு தேவ்தத் படிக்கல் (3), ஸ்ரீகர் பாரத் (2) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ், 40 பந்தில் 50 ரன் விளாசினார். சஞ்சு சாம்சன் (45) ஓரளவு கைகொடுத்தார். மறுமுனையில் அசத்திய ரிக்கி புய் (90*), தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார்.
மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 'டி' அணி 2வது இன்னிங்சில் 244/5 ரன் எடுத்து, 311 ரன் முன்னிலையில் இருந்தது.
ரியான் பராக் அரைசதம்
மற்றொரு லீக் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 'ஏ' 297, இந்தியா 'சி' 234 ரன் எடுத்தன. பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா 'ஏ' அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் (34) ஆறுதல் தந்தார். ரியான் பராக் (73), ஷஷ்வத் ரவாத் (53) அரைசதம் கடந்தனர். ஆட்டநேர முடிவில் இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 270/6 ரன் எடுத்து, 333 ரன் முன்னிலை பெற்றிருந்தது. குமார் குஷாக்ரா (40) அவுட்டாகாமல் இருந்தார்.