/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பஞ்சாப் அணியில் சுப்மன் கில்: விஜய் ஹசாரே டிராபிக்கு தேர்வு
/
பஞ்சாப் அணியில் சுப்மன் கில்: விஜய் ஹசாரே டிராபிக்கு தேர்வு
பஞ்சாப் அணியில் சுப்மன் கில்: விஜய் ஹசாரே டிராபிக்கு தேர்வு
பஞ்சாப் அணியில் சுப்மன் கில்: விஜய் ஹசாரே டிராபிக்கு தேர்வு
ADDED : டிச 22, 2025 10:39 PM

சண்டிகர்: விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான பஞ்சாப் அணியில் சுப்மன் கில், அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றுஉள்ளனர்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) 33வது சீசன் நாளை துவங்குகிறது. இதன் பைனல், வரும் ஜன. 18ல் நடக்கவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள பஞ்சாப் அணி அறிவிக்கப்பட்டது. சமீபத்தில், விஜய் ஹசாரே டிராபியில் இந்திய வீரர்கள் குறைந்தபட்சம் 2 போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ., உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து பஞ்சாப் அணி சார்பில் சுப்மன் கில், அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங் களமிறங்குகின்றனர். இவர்களை தவிர பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங், ராமன்தீப் சிங், ஹர்பிரீத் பிரார், நமன் திர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
பஞ்சாப் அணி, தனது முதலிரண்டு போட்டியில் மகாராஷ்டிரா (டிச. 24), சட்டீஸ்கர் (டிச. 26) அணிகளை சந்திக்கிறது. இவ்விரு போட்டிகளில் சுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் பங்கேற்கலாம்.
இஷான் கேப்டன்: இத்தொடருக்கான ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷான் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் இவரது தலைமையிலான ஜார்க்கண்ட் அணி, சையது முஷ்தாக் அலி டிராபியில் முதன்முறையாக சாம்பியன் ஆனது. தவிர இவர், 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வானார்.

