/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சுப்மன் கில் 'நம்பர்-6': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
/
சுப்மன் கில் 'நம்பர்-6': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
சுப்மன் கில் 'நம்பர்-6': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
சுப்மன் கில் 'நம்பர்-6': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : ஜூலை 09, 2025 10:42 PM

துபாய்: டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் முதன்முறையாக 'டாப்-10' பட்டியலில் இடம் பிடித்தார்.
டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்திய கேப்டன் சுப்மன் கில், 807 புள்ளிகளுடன் 21வது இடத்தில் இருந்து முதன்முறையாக 'நம்பர்-6' இடத்துக்கு முன்னேறினார்.
பர்மிங்ஹாம் டெஸ்டில் பேட்டிங்கில் அசத்திய கில், இரு இன்னிங்சிலும் சதம் (269, 161) கடந்தார். இதற்கு முன், கடந்த 2023, செப்டம்பரில் வெளியான தரவரிசையில் 14வது இடம் பிடித்திருந்தார் கில். ஏற்கனவே இவர், ஒருநாள் போட்டிக்கான பேட்டர் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் (858 புள்ளி) 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட் (790), 7வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
புரூக் 'நம்பர்-1': பர்மிங்ஹாம் டெஸ்டில் சதம் விளாசிய (158) இங்கிலாந்தின் ஹாரி புரூக், 886 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (868) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இப்போட்டியில் பேட்டிங்கில் நம்பிக்கை தந்த (184*, 88) இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்டர் ஜேமி ஸ்மித் (753) 16 இடம் முன்னேறி, முதன்முறையாக 10வது இடத்தை கைப்பற்றினார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 367 ரன் விளாசிய தென் ஆப்ரிக்காவின் வியான் முல்டர், 34 இடம் முன்னேறி 22வது இடத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் 15வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் இந்தியாவின் ஜடேஜா நீடிக்கிறார். பவுலர் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா (898) முதலிடத்தில் உள்ளார்.

