sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

வருகிறது 'ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்' * ஐ.பி.எல்., தொடரில் அறிமுகம்

/

வருகிறது 'ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்' * ஐ.பி.எல்., தொடரில் அறிமுகம்

வருகிறது 'ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்' * ஐ.பி.எல்., தொடரில் அறிமுகம்

வருகிறது 'ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்' * ஐ.பி.எல்., தொடரில் அறிமுகம்


ADDED : மார் 19, 2024 11:08 PM

Google News

ADDED : மார் 19, 2024 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''அம்பயர்கள் தீர்ப்பை துல்லியமாக அறிவிக்கவும், முடிவெடுக்கும் வேகத்தை அதிகரிக்கவும், ஐ.பி.எல்., தொடரில் 'ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்' அறிமுகமாகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, கிரிக்கெட்டில் அவ்வப்போது புதுமைகள் கொண்டு வரப்படுகின்றன. ஒளிரும் 'பெய்ல்ஸ்', பந்து பேட்டில் பட்டதை அறிய 'ஸ்னிக்கோ மீட்டர்', பந்து செல்லும் திசையை அறிய 'ஹாக் ஐ' உள்ளிட்ட வரிசையில், இம்முறை 'எலக்ட்ரா ஸ்டம்புகள்' வரவுள்ளன. இதில், பவுண்டரி, சிக்சர், அவுட் என பல முடிவுக்கு ஏற்ப, இருபுறமும் உள்ள ஸ்டம்புகள் ஒளிர்வது, புதுமையாக இருக்கும்.

தவிர, அம்பயர் தீர்ப்பை மறுபரீசிலனை செய்யும் 'டி.ஆர்.எஸ்.,' முறையில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, புதிதாக 'ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்' (எஸ்.ஆர்.எஸ்.,) அறிமுகமாகிறது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் வரும் ஐ.பி.எல்., தொடரில் இந்த சிஸ்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதனால், அம்பயர்கள் தீர்ப்பை துல்லியமாக, வேகமாக அறிவிக்கலாம்.

எட்டு கேமரா

இதன் படி, தற்போது 'ஹாக் ஐ' தொழில்நுட்பத்தில் இரு ஸ்டம்புகளுக்கு நேராக இரு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. எஸ்.ஆர்.எஸ்., முறையில் மைதானத்தை சுற்றிலும் அதிநவீன 8 கேமராக்கள் பொருத்தப்படும். இதனால் தற்போதுள்ள 50க்குப் பதில் வினாடிக்கு 300 பிரேம் பதிவு செய்யப்படும்.

இரு 'ஹாக் ஐ' கேமராமேன்கள், டி.வி., அம்பயர்கள் ஒரே அறையில் இருப்பர். கேமரா பிரேம்களை நேரடியாக அம்பயர்களுக்கு வழங்குவதால் தாமதம் குறையும். தற்போது, ஒளிபரப்பு நிறுவனம் இதை அம்பயர்களுக்கு வழங்கி வருகிறது.

உதவுவது எப்படி

புதிய முறைப்படி ஸ்டம்பிங், ரன் அவுட், கேட்ச், ஓவர் த்ரோ என அனைத்திற்கும் எஸ்.ஆர்.எஸ்., முறையில் அம்பயர்களுக்கு 'ஹாக் ஐ' கேமரா உதவ உள்ளது.

அதாவது, பீல்டர் கேட்ச் செய்யும் போது பந்து தரையில் பட்டதா இல்லையா என்பதை அறிய, இப்போதுள்ள முறைப்படி டிவி அம்பயர்கள், டிவி ஒளிபரப்பாளரிடம் துல்லியமான இமேஜை தாருங்கள் என கேட்பர். இதில் சில நேரங்களில் 'ஜூம்' செய்து பார்த்தாலும் உறுதியாகத் தெரியாது.

எஸ்.ஆர்.எஸ்., முறையில் கேட்ச் நிகழ்வை பல்வேறு திசையில் இருந்து பார்க்கும் வகையில் ஒரே பிரேம் ஆக துல்லியமாக தரப்படும். அம்பயர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப இதை ஆராய்ந்து துல்லியமாக முடிவை அறிவிக்கலாம்.

* பவுண்டரி லைனில் வீரர் பந்தை கேட்ச் செய்யும் தருணத்தில், அவரது கால் எந்த இடத்தில் இருந்தது என்பதை தற்போது ஒரே நேரத்தில் தெரிந்து கொள்ள முடியாது. தனித்தனி கேமரா பிரேம் உதவியால் தான் பார்க்க முடியும். புதிய முறையில் பல்வேறு திசையில் இருந்து பார்க்கும் படி ஒரே பிரேம் ஆக அம்பயருக்கு 'ஹாக் ஐ' கேமரா மேன் கொடுப்பர். இதனால் முடிவை சரியாக தெரிந்து கொள்ளலாம். இதேபோல, பந்தை பீல்டர் த்ரோ செய்யும் போது, பேட்டர்கள் எங்கு உள்ளனர் என பல முடிவுகளை சரியாக அறிய முடியும்.

'அல்ட்ரா எட்ஜ்' வேண்டாம்

தற்போது பந்து பேட்டில் பட்டதா, இல்லையா என அறிய பெரும்பாலும் 'அல்ட்ரா எட்ஜ்' முறை பயன்படுத்தப்படுகிறது. எஸ்.ஆர்.எஸ்., முறையில் இதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம் என்பதால் அம்பயர், 'அல்ட்ரா எட்ஜ்' முறையில் 'செக்' செய்யமாட்டார். தவிர ஸ்டம்பிங் செய்யும் போதும், வீரர் கால் இருக்கும் இடத்தை தெளிவாக அறிய முடியும்.

அம்பயர்களுக்கு பயிற்சி

இங்கிலாந்தின் 'தி ஹண்ட்ரடு' தொடரில் எஸ்.ஆர்.எஸ்., முறை சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது ஐ.பி.எல்., தொடரில் களமிறங்கும் உள்ளூர், அன்னிய அம்பயர்கள் 15 பேருக்கு, பி.சி.சி.ஐ., சார்பில் எஸ்.ஆர்.எஸ்., குறித்து இருநாள் பயிற்சி தரப்பட்டது.






      Dinamalar
      Follow us