/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-4' * ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
/
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-4' * ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-4' * ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-4' * ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : பிப் 13, 2024 09:56 PM

துபாய்: பெண்களுக்கான ஐ.சி.சி., தரவரிசையில் நான்காவது இடத்துக்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தனா.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை ('ரேங்க்') பட்டியல் வெளியானது. ஒருநாள் பேட்டர் வரிசையில் இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 27, இரண்டு இடம் முன்னேறி, 696 புள்ளியுடன் 'நம்பர்-4' இடத்தை பிடித்தார். இங்கிலாந்தின் நாட் சிவர் (807), இலங்கையின் சமாரி அத்தபத்து (736), ஆஸ்திரேலியாவின் பேத் மூனே (717) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.
மற்றொரு இந்திய வீராங்கனை, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (639), 10 வது இடத்தில் உள்ளார். வேறு யாரும் 'டாப்-20' இடத்தில் இல்லை.
பந்து வீச்சாளர்கள் வரிசையில் இங்கிலாந்தின் சோபி முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் தீப்தி சர்மா, ஒரு இடம் பின்தங்கி, நான்காவது இடத்தில் உள்ளார். இருப்பினும் ஆல் ரவுண்டர் வரிசையில் தீப்தி, ஐந்தாவது இடத்துக்கு முன்னேறினார்.