/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-4': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
/
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-4': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-4': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-4': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : ஜூலை 30, 2024 11:45 PM

துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்டர் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 4வது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.
பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 743 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 'நம்பர்-4' இடத்துக்கு முன்னேறினார். துணை கேப்டனான இவர், சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பை பைனலில் 60 ரன் விளாசினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா (631 புள்ளி) 11வது இடத்தில் நீடிக்கிறார். ஆசிய கோப்பை பைனலில் 61 ரன் விளாசிய இலங்கை கேப்டன் சமாரி (705), 9வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறினார்.
ரேணுகா 'நம்பர்-5': பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ரேணுகா சிங் தாகூர், 722 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார். வேகத்தில் மிரட்டிய இவர், ஆசிய கோப்பையில் 7 விக்கெட் சாய்த்தார். தீப்தி சர்மா (755) 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்றொரு இந்திய வீராங்கனை ராதா யாதவ் (665), 13வது இடத்துக்கு முன்னேறினார்.