/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்கா 5வது வெற்றி: அமெரிக்காவை வீழ்த்தியது
/
தென் ஆப்ரிக்கா 5வது வெற்றி: அமெரிக்காவை வீழ்த்தியது
தென் ஆப்ரிக்கா 5வது வெற்றி: அமெரிக்காவை வீழ்த்தியது
தென் ஆப்ரிக்கா 5வது வெற்றி: அமெரிக்காவை வீழ்த்தியது
UPDATED : ஜூன் 20, 2024 12:05 AM
ADDED : ஜூன் 20, 2024 12:01 AM

நார்த் சவுண்டு: அமெரிக்காவுக்கு எதிரான 'சூப்பர்-8' போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசின் நார்த் சவுண்டில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற அமெரிக்க அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
குயின்டன் அபாரம்
தென் ஆப்ரிக்க அணிக்கு ரீசா ஹென்டிரிக்ஸ் (11) சோபிக்கவில்லை. ஜெசி சிங் வீசிய 4வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் பறக்கவிட்டார் குயின்டன். ஸ்டீவன் டெய்லர் வீசிய 8வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் கேப்டன் மார்க்ரம். ஹர்மீத் சிங் வீசிய 9வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த குயின்டன், 27 பந்தில் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்த போது ஹர்மீத் சிங் பந்தில் குயின்டன் (74) அவுட்டானார். டேவிட் மில்லர் (0) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய மார்க்ரம் (46) கைகொடுத்தார்.
தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன் எடுத்தது. கிளாசன் (36), ஸ்டப்ஸ் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
கவுஸ் அசத்தல்
சவாலான இலக்கை விரட்டிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் (24) நல்ல துவக்கம் கொடுத்தார். நிதிஷ் குமார் (8), கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் (0), கோரி ஆண்டர்சன் (12), ஷயான் ஜஹாங்கிர் (3) ஏமாற்றினர். அமெரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 76 ரன் எடுத்து திணறியது.
பின் இணைந்த ஆன்ட்ரிஸ் கவுஸ், ஹர்மீத் சிங் ஜோடி நம்பிக்கை தந்தது. நார்ட்ஜே வீசிய 15வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர் விளாசிய கவுஸ், 33 பந்தில் அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்த போது ரபாடா 'வேகத்தில்' ஹர்மீத் (38) வெளியேறினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன் தேவைப்பட்டன. நார்ட்ஜே பந்துவீசினார். இந்த ஓவரில் 7 ரன் மட்டும் கிடைத்தது.
அமெரிக்க அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்து தோல்வியடைந்தது. கவுஸ் (80), ஜாஸ்தீப் சிங் (2) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட் சாய்த்தார். இத்தொடரில் தென் ஆப்ரிக்க அணி தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே லீக் சுற்றில் 4 போட்டியில் வென்றது.