தென் ஆப்ரிக்க அணி அபாரம்: 91 ரன்னுக்கு சுருண்டது வங்கம்
தென் ஆப்ரிக்க அணி அபாரம்: 91 ரன்னுக்கு சுருண்டது வங்கம்
UPDATED : நவ 23, 2026 11:00 PM
ADDED : நவ 23, 2026 09:58 PM

செஞ்சுரியன்: இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்க பவுலர்கள் அசத்த, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 91 ரன்னுக்கு சுருண்டது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. நேற்று, 2வது டெஸ்ட் செஞ்சுரியனில் மழையால் 4 மணி நேரம் தாமதமாக துவங்கியது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
வங்கதேச அணிக்கு, தென் ஆப்ரிக்க பவுலர்கள் தொல்லை தந்தனர். மார்கோ யான்சென் பந்தில் தான்சித் ஹசன் (3) அவுட்டானார். நோர்க்கியா 'வேகத்தில்' மஹ்பிஜுல் (23), கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (4) போல்டாகினர். வியான் முல்டர் பந்தில் மோமினுல் ஹக் (18) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தவ்ஹித் (19), லிட்டன் தாஸ் (8) நிலைக்கவில்லை. ரபாடா 'வேகத்தில்' ஷோரிபுல் (2), ஜேக்கர் அலி (1), டாஸ்கின் அகமது (2) வெளியேறினர். யான்சென் பந்தில் கலீத் அகமது (0) அவுட்டானார். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 91 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் யான்சென், ரபாடா தலா 3, நோர்க்கியா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, ஆட்டநேர முடிவில் 88/1 ரன் எடுத்திருந்தது.
