/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்கா வலுவான முன்னிலை: பவுமா, ஸ்டப்ஸ் சதம்
/
தென் ஆப்ரிக்கா வலுவான முன்னிலை: பவுமா, ஸ்டப்ஸ் சதம்
தென் ஆப்ரிக்கா வலுவான முன்னிலை: பவுமா, ஸ்டப்ஸ் சதம்
தென் ஆப்ரிக்கா வலுவான முன்னிலை: பவுமா, ஸ்டப்ஸ் சதம்
ADDED : நவ 29, 2024 09:48 PM

டர்பன்: கேப்டன் பவுமா, ஸ்டப்ஸ் சதம் கடந்து கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி வலுவான முன்னிலை பெற்றது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 191, இலங்கை 42 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 132/3 ரன் எடுத்திருந்தது. ஸ்டப்ஸ் (17), பவுமா (24) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த கேப்டன் பவுமா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சதம் விளாசினர். நான்காவது விக்கெட்டுக்கு 249 ரன் சேர்த்த போது ஸ்டப்ஸ் (122) அவுட்டானார். பவுமா 113 ரன்னில் ஆட்டமிழந்தார். தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 366 ரன் குவித்து 'டிக்ளேர்' செய்தது. டேவிட் பெடிங்காம் (21) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் விஷ்வா பெர்ணான்டோ, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின், 516 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னே (4), பதும் நிசங்கா (23) சுமாரான துவக்கம் கொடுத்தனர். மாத்யூஸ் (25) ஆறுதல் தந்தார்.
ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 103/5 ரன் எடுத்திருந்தது. சண்டிமால் (29) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா, யான்சென் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.