/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்க அணி முன்னிலை: வியான் முல்டர் சதம்
/
தென் ஆப்ரிக்க அணி முன்னிலை: வியான் முல்டர் சதம்
ADDED : ஜூன் 30, 2025 09:44 PM

புலவாயோ: முதல் டெஸ்டில் வியான் முல்டர் சதம் விளாச தென் ஆப்ரிக்க அணி வலுவான முன்னிலை பெற்றது.
ஜிம்பாப்வே சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புலவாயோவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 418/9 ('டிக்ளேர்'), ஜிம்பாப்வே 251 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 49/1 ரன் எடுத்திருந்தது. ஜோர்ஜி (22), முல்டர் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
முல்டர் அபாரம்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் டோனி டி ஜோர்ஜி (31) நிலைக்கவில்லை. வின்சன்ட் மசேகேசா 'சுழலில்' லுவான் பிரிட்டோரியஸ் (4), டிவால்ட் பிரவிஸ் (3) போல்டாகினர். அபாரமாக ஆடிய வியான் முல்டர், டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். இவர், 147 ரன்னில் ஆட்டமிழந்தார். வெலிங்டன் மசகட்சா பந்தில் கைல் வெர்ரின்னே (36), கார்பின் போஷ் (36) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் கேஷவ் மஹாராஜ் (51) அரைசதம் கடந்தார்.
தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 369 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. கோடி யூசுப் (8) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே சார்பில் மசகட்சா 4 விக்கெட் சாய்த்தார்.
கடின இலக்கு: பின், 537 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணி, ஆட்டநேர முடிவில் 32/1 ரன் எடுத்து, 505 ரன் பின்தங்கி இருந்தது. பிரின்ஸ் (5) அவுட்டாகாமல் இருந்தார்.