/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
/
கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
ADDED : ஆக 18, 2024 10:27 PM

கயானா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா 1-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் கயானாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 160, வெஸ்ட் இண்டீஸ் 144 ரன் எடுத்தன. தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 246 ரன் எடுத்தது.
பின், 263 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (25), கவேம் ஹாட்ஜ் (29) ஆறுதல் தந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து திணறியது. பின் இணைந்த குடகேஷ் (45), ஜோஷுவா டா சில்வா (27) ஜோடி நம்பிக்கை தந்தது. கேஷவ் மஹாராஜ் 'சுழலில்' ஜெய்டன் சீல்ஸ் (4) சிக்கினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 222 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. ஜோமல் வாரிகன் (25) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் மஹாராஜ், ரபாடா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
இதன்மூலம் தென் ஆப்ரிக்க அணி, டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக 10வது முறையாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடரை வென்றது. தொடர் நாயகன் விருதை கேஷவ் மஹாராஜ் (13 விக்கெட்) தட்டிச் சென்றார்.