/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்க பெண்கள் வெற்றி: இலங்கையை வீழ்த்தியது
/
தென் ஆப்ரிக்க பெண்கள் வெற்றி: இலங்கையை வீழ்த்தியது
தென் ஆப்ரிக்க பெண்கள் வெற்றி: இலங்கையை வீழ்த்தியது
தென் ஆப்ரிக்க பெண்கள் வெற்றி: இலங்கையை வீழ்த்தியது
ADDED : மார் 28, 2024 11:56 PM

பெனோனி: இலங்கைக்கு எதிரான முதலாவது 'டி-20' போட்டியில் கேப்டன் லாரா சதம் விளாச தென் ஆப்ரிக்க பெண்கள் அணி 79 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை பெண்கள் அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பெனோனியில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
தென் ஆப்ரிக்க அணிக்கு டாஸ்மின் பிரிட்ஸ் (15) சோபிக்கவில்லை. பின் இணைந்த கேப்டன் லாரா வோல்வார்ட், மரிஜான் காப் ஜோடி ரன் மழை பொழிந்தது. மரிஜான் காப் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்த போது மரிஜான்னே காப் (60) அவுட்டானார். சுனே லுாஸ் (14) 'ரன்-அவுட்' ஆனார். அபாரமாக ஆடிய லாரா சதம் விளாசினார். இது, சர்வதேச 'டி-20' அரங்கில் இவரது முதல் சதம். இவர், 63 பந்தில் 102 ரன் (3 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணி 18.2 ஓவரில் 119 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இலங்கை அணிக்கு ஹர்ஷிதா சமரவிக்ரமா (38), ஹாசினி பெரேரா (30) ஆறுதல் தந்தனர்.