/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்க அணி அபாரம்: மார்க்ரம், வெர்ரின்னே அரைசதம்
/
தென் ஆப்ரிக்க அணி அபாரம்: மார்க்ரம், வெர்ரின்னே அரைசதம்
தென் ஆப்ரிக்க அணி அபாரம்: மார்க்ரம், வெர்ரின்னே அரைசதம்
தென் ஆப்ரிக்க அணி அபாரம்: மார்க்ரம், வெர்ரின்னே அரைசதம்
ADDED : ஆக 17, 2024 10:48 PM

கயானா: மார்க்ரம், வெர்ரின்னே அரைசதம் கடந்து கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 246 ரன் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கயானாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 160, வெஸ்ட் இண்டீஸ் 144 ரன் எடுத்தன. பின் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் (51) கைகொடுத்தார். இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 223/5 ரன் எடுத்திருந்தது. வெர்ரின்னே (50), வியான் முல்டர் (34) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆறாவது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்த போது முல்டர் (34) அவுட்டானார். வெர்ரின்னே (59) நம்பிக்கை தந்தார். கேஷவ் மஹாராஜ் (0), ரபாடா (6), பர்கர் (0) ஏமாற்றினர். தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 246 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு 263 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

