/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: இலங்கை அணி ஏமாற்றம்
/
தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: இலங்கை அணி ஏமாற்றம்
தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: இலங்கை அணி ஏமாற்றம்
தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: இலங்கை அணி ஏமாற்றம்
ADDED : ஜூன் 03, 2024 11:28 PM

நியூயார்க்: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் நடக்கிறது. நியூயார்க்கில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.
நார்ட்ஜே அசத்தல்
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (3) ஏமாற்றினார். நார்ட்ஜே 'வேகத்தில்' கமிந்து மெண்டிஸ் (11) வெளியேறினார். கேஷவ் மஹாராஜ் வீசிய 9வது ஓவரில் கேப்டன் வனிந்து ஹசரங்கா (0), சதீரா சமரவிக்ரமா (0) அவுட்டாகினர். தொடர்ந்து மிரட்டிய நார்ட்ஜே பந்தில் குசால் மெண்டிஸ் (19), சரித் அசலங்கா (6) 'பெவிலியன்' திரும்பினர். பின் இணைந்த அனுபவ மாத்யூஸ் (17), தசுன் ஷனகா (9) ஜோடி சோபிக்கவில்லை.
இலங்கை அணி 19.1 ஓவரில் 77 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தீக் ஷனா (7) அவுட்டாகாமல் இருந்தார்.
குயின்டன் ஆறுதல்
சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ரீசா ஹென்டிரிக்ஸ் (4) ஏமாற்றினார். கேப்டன் மார்க்ரம் (12) நிலைக்கவில்லை. மாத்யூஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய குயின்டன் டி காக் (20), ஹசரங்காவிடம் சரணடைந்தார். ஸ்டப்ஸ் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹசரங்கா வீசிய 15வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார் கிளாசன். ஹசரங்கா பந்தை பவுண்டரிக்கு விரட்டிடய மில்லர் வெற்றியை உறுதி செய்தார். தென் ஆப்ரிக்க அணி 16.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 80 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கிளாசன் (19), மில்லர் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.