/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தெற்கு-மத்திய மண்டலம் மோதல்: துலீப் டிராபி பைனலில்
/
தெற்கு-மத்திய மண்டலம் மோதல்: துலீப் டிராபி பைனலில்
தெற்கு-மத்திய மண்டலம் மோதல்: துலீப் டிராபி பைனலில்
தெற்கு-மத்திய மண்டலம் மோதல்: துலீப் டிராபி பைனலில்
ADDED : செப் 07, 2025 11:11 PM

பெங்களூரு: துலீப் டிராபி பைனலில் தெற்கு, மத்திய மண்டல அணிகள் மோதுகின்றன.
பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி கிரிக்கெட் அரையிறுதியின் முதல் இன்னிங்சில் தெற்கு மண்டலம் 536 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் வடக்கு மண்டல அணி 278/5 ரன் எடுத்திருந்தது.
கடைசி நாள் ஆட்டத்தில் வடக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 361 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பின் 2வது இன்னிங்சை துவக்கிய தெற்கு மண்டல அணியின் நாராயணன் ஜெகதீசன் (52*) அரைசதம் கடந்தார். ஆட்டநேர முடிவில் தெற்கு மண்டல அணி 95/1 ரன் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி 'டிரா' ஆனது. முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் தெற்கு மண்டலம் பைனலுக்குள் நுழைந்தது.
ஜெய்ஸ்வால் அரைசதம்
மற்றொரு அரையிறுதியின் முதல் இன்னிங்சில் மேற்கு மண்டலம் 438, மத்திய மண்டலம் 600 ரன் எடுத்தன. பின் 2வது இன்னிங்சை துவக்கிய மேற்கு மண்டல அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (64) கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் மேற்கு மண்டல அணி 216/8 ரன் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி 'டிரா' ஆனது. முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் மத்திய மண்டலம் பைனலுக்கு முன்னேறியது.
பெங்களூருவில், வரும் செப். 11-15ல் நடக்கவுள்ள பைனலில் தெற்கு, மத்திய மண்டல அணிகள் விளையாடுகின்றன.