/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல் * மூன்று விக்கெட் சாய்த்தார் மஹாராஜ்
/
வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல் * மூன்று விக்கெட் சாய்த்தார் மஹாராஜ்
வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல் * மூன்று விக்கெட் சாய்த்தார் மஹாராஜ்
வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல் * மூன்று விக்கெட் சாய்த்தார் மஹாராஜ்
UPDATED : ஆக 10, 2024 10:46 PM
ADDED : ஆக 09, 2024 10:32 PM

போர்ட் ஆப் ஸ்பெயின்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. சுழலில் அசத்திய மஹாராஜ், 3 விக்கெட் சாய்த்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 344 ரன் எடுத்திருந்தது. மல்டர் (37), ரபாடா (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் ரபாடா 21 ரன்னில் அவுட்டாக, லுங்கிடி 'டக்' அவுட்டானார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 357 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மல்டர் (41) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வாரிகன் 4, ஜேடன் 3, கீமர் ரோச் 2 விக்கெட் சாய்த்தனர்.
மஹாராஜ் அபாரம்
பின் முதல் இன்னிங்கை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் பிராத்வைட் (35), லுாயிஸ் (35) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது.
கார்ட்டி 42 ரன் எடுத்த போது மஹாராஜ் சுழலில் சிக்கினார். தொடர்ந்து அசத்திய மஹாராஜ், அதானசை (3) விரைவில் வெளியேற்றினார். மூன்றாவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்து, 212 ரன் பின்தங்கி இருந்தது. ஹாட்ஜ் (11), ஹோல்டர் (13) அவுட்டாகாமல் இருந்தனர். சுழலில் அசத்திய தென் ஆப்ரிக்காவின் மஹாராஜ், 3 விக்கெட் சாய்த்தார்.