/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெஸ்ட் இண்டீஸ் 'ஹாட்ரிக்' வெற்றி * தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
/
வெஸ்ட் இண்டீஸ் 'ஹாட்ரிக்' வெற்றி * தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
வெஸ்ட் இண்டீஸ் 'ஹாட்ரிக்' வெற்றி * தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
வெஸ்ட் இண்டீஸ் 'ஹாட்ரிக்' வெற்றி * தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
ADDED : ஆக 28, 2024 10:55 PM

தரவுபா: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது 'டி-20' போட்டியில் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது, கடைசி போட்டி, நேற்று தரவுபாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் 'பீல்டிங்' தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி தாமதம் ஆக, தலா 13 ஓவர்களாக மாற்றப்பட்டது.
ஸ்டப்ஸ் அபாரம்
தென் ஆப்ரிக்க அணிக்கு ரியான் (27), ஹென்ரிக்ஸ் (9) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. கேப்டன் மார்க்ரம், 20 ரன் எடுத்தார். பின் வந்த திரிஸ்டன் ஸ்டப்ஸ், ரன் மழை பொழிந்தார். 15 பந்தில் இவர், 40 ரன் (3 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்து அணிக்கு கைகொடுத்தார். தென் ஆப்ரிக்கா அணி 13 ஓவரில் 108/4 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீசின் ரொமாரியோ ஷெப்பர்டு 2 விக்கெட் சாய்த்தார்.
ஹோப் விளாசல்
அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி, 13 ஓவரில் 116 ரன் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது. அதானஸ் (1), ஷாய் ஹோப் ஜோடி மோசமான துவக்கம் தந்தது.
பூரன், 13 பந்தில் 35 ரன் விளாசி கைகொடுத்தார். பின் இணைந்த ஹோப் (42), ஹெட்மயர் (31) ஜோடி, அவுட்டாகாமல் இருந்து அணியை எளிதாக வெற்றிக்கு கொண்டு சென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி 9.2 ஓவரில் 116/2 ரன் எடுத்தது. 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என தொடரை வென்றது.