உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 11, 2024 11:09 PM

அ நிறம் | அளவு
செயின்ட் லுாயிஸ்: புரோ சீரிஸ் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை அகங்ஷா முன்னேறினார்.
அமெரிக்காவில் பெண்களுக்கான புரோ சீரிஸ் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் இந்தியாவின் அகங்ஷா சாலுங்கேவுக்கு 'பை' வழங்கப்பட்டது. இரண்டாவது சுற்றில் அகங்ஷா சாலுங்கே, நார்வேயின் மேடலின் ஹைலண்ட் மோதினர். மொத்தம் 41 நிமிடம் நீடித்த போட்டியில் அகங்ஷா 3-2 (13-15, 11-6, 9-11, 11-5, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
கோவாவை சேர்ந்த நடப்பு தேசிய சாம்பியனான அகங்ஷா சாலுங்கே, காலிறுதியில் எகிப்தின் ஜனா ஸ்வாபியை எதிர்கொள்கிறார்.
