/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இலங்கை அணி தகுதி: பெண்கள் 'டி-20' உலக கோப்பைக்கு
/
இலங்கை அணி தகுதி: பெண்கள் 'டி-20' உலக கோப்பைக்கு
ADDED : மே 06, 2024 10:50 PM

அபுதாபி: பெண்கள் 'டி-20' உலக கோப்பை தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றது. அரையிறுதியில் 15 ரன் வித்தியாசத்தில் யு.ஏ.இ., அணியை வீழ்த்தியது.
வங்கதேசத்தில் ஐ.சி.சி., பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் வரும் அக். 3-20ல் நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு தகுதிச் சுற்று நடக்கிறது. இதன் முதல் அரையிறுதியில் ஸ்காட்லாந்து அணி, அயர்லாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலக கோப்பைக்குள் நுழைந்தது.
அபுதாபியில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற யு.ஏ.இ., அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. விஷ்மி (45), ஹர்ஷிதா மாதவி (24), கேப்டன் சமாரி (21) கைகொடுக்க இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.
பின் களமிறங்கிய யு.ஏ.இ., அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஈஷா ஓசா (66) அரைசதம் கடந்தார். இலங்கை சார்பில் சமாரி 2 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் இலங்கை அணி 7வது முறையாக (1997, 2000, 2005, 2009, 2013, 2017, 2024) உலக கோப்பைக்கு தகுதி பெற்றது.
பைனலில் ஸ்காட்லாந்து, இலங்கை அணிகள் மோதுகின்றன.