ADDED : ஜூலை 31, 2026 10:14 PM

புதுடில்லி: உடற்தகுதியை நிரூபித்த பும்ரா, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க தயாராக உள்ளார்.
இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் ஆக. 15ல் காலேயில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் (ஆக. 23-27) நடக்கவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ராவின் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) சிறப்பு மையத்தில் பும்ராவுக்கு உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற பும்ரா, இலங்கைக்கு எதிராக விளையாடுவது உறுதியானது.
