தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/98 ரன்னில் சுருண்டது இலங்கை

98 ரன்னில் சுருண்டது இலங்கை

98 ரன்னில் சுருண்டது இலங்கை


ADDED : நவ 17, 2026 10:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 10:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராவல்பிண்டி: ராவல்பிண்டி டெஸ்ட் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 98 ரன்னில் சுருண்டது.

பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி இரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட், ராவல்பிண்டியில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

இலங்கை அணிக்கு லகிரு உதரா (4), பசிந்து (2) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. தினேஷ் சண்டிமால் (7), கமிந்து மெண்டிஸ் (8) நிலைக்கவில்லை. தனஞ்செயா 1 ரன் எடுத்தார்.

இலங்கை அணி 36 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. கேப்டன் குசல் மெண்டிஸ், சோனல் தினுஷா (21) சற்று உதவினர். 6 வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது குசல் (32) அவுட்டானார். மிலன் ரத்னாயகே (0), பிரபாத் (3) கைவிட்டனர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 98 ரன்னுக்கு சுருண்டது. பாகிஸ்தான் சார்பில் முகமது அபாஸ், ஆமெர் ஜமால், அப்பாஸ் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 121/3 ரன் எடுத்து, 23 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us