தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இலங்கை அணி வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்

இலங்கை அணி வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்

இலங்கை அணி வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்


ADDED : ஜூன் 14, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது 'டி-20' போட்டியில் அசத்திய இலங்கை அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இரண்டாவது போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

இலங்கை அணிக்கு கேப்டன் குசால் மெண்டிஸ் (31) நல்ல துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய கமில் மிஷாரா அரைசதம் கடந்தார். கமிந்து மெண்டிஸ் (24) ஓரளவு கைகொடுத்தார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய தசுன் ஷனகா, 19 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 24 பந்தில் 58 ரன் (4X6, 5X4) எடுத்து அவுட்டானார்.

இலங்கை அணி 20 ஓவரில் 194/6 ரன் எடுத்தது. கமில் (61 ரன், 3X6, 4X4) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமர் ஜோசப் 3 விக்கெட் கைப்பற்றினார்.

சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ராவ்மன் பாவெல் (43), ஷிம்ரன் ஹெட்மயர் (36) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் ஷாய் ஹோப் (6), பிரண்டன் கிங் (2), ராஸ்டன் சேஸ் (17), ரூதர்போர்டு (14) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 18.1 ஓவரில் 157 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் துஷ்மந்தா சமீரா, வணிந்து ஹசரங்கா தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us