sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கோப்பை வென்றது இலங்கை: வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி

/

கோப்பை வென்றது இலங்கை: வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி

கோப்பை வென்றது இலங்கை: வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி

கோப்பை வென்றது இலங்கை: வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி


ADDED : ஜூன் 28, 2025 04:41 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அசத்திய இலங்கை அணி இன்னிங்ஸ், 78 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 1-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

இலங்கை சென்ற வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 247, இலங்கை 458 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 115/6 ரன் எடுத்திருந்தது. லிட்டன் தாஸ் (13) அவுட்டாகாமல் இருந்தார்.

நான்காம் நாள் ஆட்டத்தில் பிரபாத் ஜெயசூர்யா 'சுழலில்' லிட்டன் தாஸ் (14), நயீம் ஹசன் (5), தைஜுல் (6) சிக்கினர். தரிந்து ரத்நாயகே பந்தில் மெஹிதி ஹசன் மிராஸ் (11), எபாடட் ஹொசைன் (6) ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 133 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் சாய்த்தார்.

ஆட்ட நாயகன் (158 ரன்), தொடர் நாயகன் (369 ரன்) விருதுகளை இலங்கையின் பதும் நிசங்கா வென்றார்.

12வது முறை'சுழலில்' அசத்திய இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, டெஸ்ட் அரங்கில் 12வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்தார்.

21வது வெற்றி

கொழும்புவில் அசத்திய இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் வங்கதேசத்துக்கு எதிராக 21வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை மோதிய 28 டெஸ்டில், இலங்கை 21, வங்கதேசம் ஒரு போட்டியில் வென்றன. ஆறு டெஸ்ட் 'டிரா' ஆனது.

ஷான்டோ விலகல்

கொழும்பு டெஸ்ட் தோல்விக்கு பின், வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நஜ்முல் ஹொசைன் ஷான்டோ விலகினார். இவரது தலைமையிலான வங்கதேச அணி, 14 டெஸ்டில், 4 வெற்றி, ஒரு 'டிரா', 9 தோல்வியை பெற்றது. கடந்த ஆண்டு 'டி-20' அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய இவர், சமீபத்தில் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.








      Dinamalar
      Follow us