/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இலங்கை பவுலர்கள் திணறல்: மீண்டது ஆப்கானிஸ்தான்
/
இலங்கை பவுலர்கள் திணறல்: மீண்டது ஆப்கானிஸ்தான்
ADDED : பிப் 04, 2024 08:12 PM

கொழும்பு: கொழும்பு டெஸ்டில் இலங்கை பவுலர்கள் திணற, ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜத்ரன் சதம் விளாசினார்.
இலங்கை சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்டில் பங்கேற்கிறது. இப்போட்டி கொழும்புவில் நடக்கிறது. ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 198 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 410/6 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 439 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆப்கானிஸ்தான் சார்பில் நவீத் ஜத்ரன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஆப்கானிஸ்தானுக்கு நுார் அலி ஜத்ரன் (47) கைகொடுத்தார். அபாரமாக ஆடிய இப்ராஹிம் ஜத்ரன் சதம் விளாசினார். ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 199/1 ரன் எடுத்து, 42 ரன் மட்டும் பின்தங்கி உள்ளது. இப்ராஹிம் (101), ரஹ்மத் ஷா (46) அவுட்டாகாமல் இருந்தனர்.