/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இலங்கை அணி ரன் குவிப்பு: கமிந்து மெண்டிஸ் சதம்
/
இலங்கை அணி ரன் குவிப்பு: கமிந்து மெண்டிஸ் சதம்
ADDED : செப் 18, 2024 10:33 PM

காலே: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் சதம் கடந்தார்.
இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. காலேயில் முதல் டெஸ்ட் நடக்கிறது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னே (2) ஏமாற்றினார். பதும் நிசங்கா (27), தினேஷ் சண்டிமால் (30), மாத்யூஸ் (36) சோபிக்கவில்லை. கேப்டன் தனஞ்செயா டி சில்வா 11 ரன்னில் அவுட்டானார். பின் இணைந்த கமிந்து மெண்டிஸ், குசால் மெண்டிஸ் ஜோடி நம்பிக்கை தந்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்த போது குசால் மெண்டிஸ் (50) ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய கமிந்து மெண்டிஸ் சதம் (114) கடந்து கைகொடுத்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 302 ரன் எடுத்திருந்தது. ரமேஷ் மெண்டிஸ் (14) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓ'ரூர்க் 3, பிலிப்ஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.