
மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில் இலங்கை அணி திணறலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடக்கிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259/6 ரன் எடுத்திருந்தது. ஜமை ஸ்மித் (72), அட்கின்சன் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணியின் அட்கின்சன் 20 ரன் எடுக்க, மறுபக்கம் ஸ்மித் டெஸ்ட் அரங்கில் முதல் சதம் விளாசினார். இவர் 111 ரன்னுக்கு அவுட்டானார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இலங்கையின் அசிதா 4, பிரபாத் 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின் களமிறங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 121/4 ரன் எடுத்து, 1 ரன் பின் தங்கி இருந்தது. 'சீனியர்' மாத்யூஸ் (54) அரைசதம் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.