/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மீண்டும் கேப்டனாக ஸ்டோக்ஸ்: இங்கிலாந்து அணியில் வாய்ப்பு
/
மீண்டும் கேப்டனாக ஸ்டோக்ஸ்: இங்கிலாந்து அணியில் வாய்ப்பு
மீண்டும் கேப்டனாக ஸ்டோக்ஸ்: இங்கிலாந்து அணியில் வாய்ப்பு
மீண்டும் கேப்டனாக ஸ்டோக்ஸ்: இங்கிலாந்து அணியில் வாய்ப்பு
ADDED : மார் 07, 2025 09:50 PM

லண்டன்: இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஸ்டோக்ஸ் மீண்டும் நியமிக்கப்படலாம்.
இங்கிலாந்து ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு கேப்டனாக ஜோஷ் பட்லர் இருந்தார். பாகிஸ்தான், துபாயில் நடக்கும் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு வெளியேறியதால், கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகினார். இந்நிலையில் புதிய கேப்டனை நியமிக்க இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) முயற்சிக்கிறது.
'ஆல்-ரவுண்டர்' பென் ஸ்டோக்சை, மீண்டும் கேப்டனாக நியமிக்க இ.சி.பி., ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் அணிக்கு கேப்டனாக உள்ள இவர், தொடையின்பின்பகுதி காயத்தால் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கவில்லை. கடந்த 2022ல் (ஜூலை 18) ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த ஸ்டோக்ஸ், 2023ல் நடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்க ஓய்வு முடிவை திரும்ப பெற்றார். தவிர இவர், 2021ல் 3 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
இ.சி.பி., இயக்குனர் ராப் கீ கூறுகையில், ''நான் பார்த்த சிறந்த கேப்டன்களில் ஒருவராக ஸ்டோக்ஸ் உள்ளார். எனவே இப்பதவிக்கு அவரை பரிசீலிக்காமல் இருப்பது முட்டாள் தனமானது. டெஸ்டில் அவரது தலைமைப் பண்பை பார்த்திருக்கிறோம். அணியை சிறப்பாக வழிநடத்தக்கூடய அனைத்து தகுதியும் ஸ்டோக்சிடம் உள்ளது,'' என்றார்.