/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'ஸ்டாப் கிளாக்'... ஐ.சி.சி., அனுமதி
/
'ஸ்டாப் கிளாக்'... ஐ.சி.சி., அனுமதி
ADDED : மார் 15, 2024 11:11 PM

துபாய்: ஒருநாள், 'டி-20' போட்டிகளில் 'ஸ்டாப் கிளாக்' பயன்படுத்த ஐ.சி.சி., அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் 2023ல் நடந்த உலக கோப்பை போட்டியில் இலங்கை, வங்கதேசம் மோதின. இலங்கை வீரர் மாத்யூஸ், பேட்டிங் செய்ய களமிறங்கிய போது, 2 நிமிடத்துக்கும் மேல் தாமதம் செய்தார் என முறையிடப்பட்டது. இவர், 'டைம்டு அவுட்' முறையில் அவுட்டானதாக அம்பயர் அறிவித்தார். இதை எப்படி கணக்கிட்டனர் என ரசிகர்களுக்கு தெரியவில்லை. தவிர பவுலர்களும் பந்துவீச தாமதம் செய்கின்றனர்.
இதை ரசிகர்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ளும் வகையில், கடந்த 2023, டிசம்பர் முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் சோதனை அடிப்படையில் 'ஸ்டாப் கிளாக்' முறை கொண்டு வரப்பட்டது.
இதன் படி, ஒரு ஓவர் முடிந்தவுடன், அடுத்த ஓவரை 60 வினாடிக்கும் வீசத் துவங்க வேண்டும். ஓவர்களுக்கு இடையே ஏற்படும் தாமதத்தை இது கட்டுப்படுத்த உதவும். ஒரு இன்னிங்சில் 3 முறைக்கு மேல் தாமதம் செய்தால் எதிரணிக்கு 5 'பெனால்டி' ரன் வழங்கப்படும்.
எப்போது வரும்
தற்போது இம்முறையை ஒருநாள், 'டி-20' போட்டிகளில் அமல்படுத்த ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது. இதன்படி வரும் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கை: 'ஸ்டாப் கிளாக்' சோதனை, ஏப்ரல் மாதம் வரை நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு ஒருநாள் போட்டியிலும் 20 நிமிடம் வரை தாமதம் குறைகிறது. வரும் ஜூன் மாதம் முதல்  ஒருநாள், 'டி-20' போட்டிகளில் 'ஸ்டாப் கிளாக்' முறை நிரந்தரமாக கொண்டு வரப்படுகிறது. ஜூன் 1ல் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் துவங்கும் 'டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

